சம்பளம் மற்றும் முற்கொடுப்பனவு முரண்பாடுகளை முன்வைத்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றுக் காலை முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
அதேவேளை, இந்தப் போராட்டத்தால் விமான நிலையச் செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே இந்தப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post