கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய(bandaranaike international airport)த்தில் நேற்று (08) காலை வந்திறங்கிய வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 31 வயதான உகண்டா(uganda)வைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிய பின்னர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிய பின்னர் கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்
சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 14 கொக்கெய்ன் மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post