இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கான மின்சார விநியோகத்தை துண்டித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், அதைச் செலுத்தாத காரணத்தால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி, ஒளிபரப்பு சேவை முன்னெடுக்கப்படுகின்றது என்றும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கான மின்சார விநியோகத்தை மீள இணைப்பதற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரிகள் மின்சார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post