ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த பிரதான எண்ணெய் விநியோக நிறுவனம் இலங்கைக்கு வழங்கிய எரிபொருளுக்குரிய கட்டணத்தைச் செலுத்தக்கோரி அழுத்தத்தை பிரயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனத்திடமிருந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவுக்கே இந்த அழுத்தம் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடன்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் என்பவற்றுக்கான கடன் வழங்கலை இலங்கை அரசாங்கம் பிற்போட்ட நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி நிறுவனம் 95 ஆயிரம் மெற்றிக் தொன் எண்ணெய்யை இலங்கைக்கு விநியோகித்து அதற்கான கொடுப்பனவை வழங்குவதற்கு 200 நாள்கள் கால அவகாசம் வழங்கியிருந்தது. எனினும், தற்போது 80 நாள்களுக்குள் தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கையை அந்த நிறுவனம் நிர்ப்பந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் ஏனைய எண்ணெய் நிறுவனங்களும் இதே நிலையைப் பின்பற்றலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா, குவைத்மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் உள்ள எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளும் பிற்போடப்பட்டுள்ளதாக திறைசேரித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post