ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்திருந்தாலும் அக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு மேற்படி இரு கட்சிகளும் தீர்மானம் எடுத்திருந்தன. இது தொடர்பில் ஊடகங்களுக்கும் அறிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
எனினும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாரப் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின்போதும் இவ்விருவரும் கட்சி முடிவைமீறி அதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post