ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரியில் இருந்து நைஜீரியாவில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, நைஜீரியாவில் விவசாயிகள் கொள்ளையர்களால் கடத்தப்பகின்றனர்.மேலும், அவர்களது விலை பொருட்களும் கொள்ளையடிக்கப்படுகின்றன.
எனவே, விவசாயிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க நைஜீரிய அரசு அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி போலா டின்பு தெரிவித்திருக்கிறார்.
மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து மக்களை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனவும் போலா டின்பு தெரிவித்திருக்கிறார்.
இந்த விலை ஏற்றத்தை குறைப்பது மட்டுமன்றி எதிர்காலத்தில் உணவு நெருக்கடியை தவிர்க்கவும், அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரியாவில் விலைவாசி உயர்வு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post