இலங்கையில் கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளாா்.
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நகர்த்துவது பெரும் திண்டாட்டமாகியுள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
வெளிநாடு செல்வதற்காக அதிகளவானோர் முண்டியடிப்பதால் கடவுச் சீட்டுப் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடுகின்றனர். அதனால் இரவு பகலாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
பத்திரமுல்லையில் உள்ள குடிவரவு – குடியகல்வு அலுவலகத்துக்கு முன்பாக வரிசையில் காத்திருந்த பெண்ணெ குழந்தை பிரசவித்துள்ளார்.
வரிசையில் காத்திருந்த பெண்ணுக்குத் திடீர் என்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து இராணுத்தினர் அந்தப் பெண்ணை காசல் வீதியில் உள்ள மகளிர் அழைத்துச் சென்றனர்.
ஆயினும் பெண்ணுக்கு இடைவழியிலேயே குழந்தை பிறந்துள்ளது. ஹட்டனைச் சேர்ந்த 26 வயதுப் பெண்ணே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையில் எரிபொருளைப் பெறுவதற்காகவும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். எரிபொருள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்போர் உயிழிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
Discussion about this post