இரண்டு சேவை முறைமைகளின் அடிப்படையில் ஒருநாள் சேவையூடாக வெளிநாட்டு கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒருநாள் சேவையை பெறுவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் நாயகம் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.
தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாள் ஒன்றுக்கு 50 சதவீதமான பணிக்குழாமினரை கொண்டே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் நாயகம் குறிப்பிட்டார்.
Discussion about this post