இலங்கையில் இருந்து திருமணத்திற்காக அவுஸ்திரேலிய செல்ல ஆயத்தமான இலங்கை யுவதியொருவர் கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தனது கடவுச்சீட்டை புதுப்பிக்க வந்த மணப்பெண்ணுக்கு, எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்கு தயாரான குறித்த யுவதி இணையம் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.
விவாகரத்து செய்துவிடுவதாக மணமகன் தெரிவிப்புஅதற்காக கைரேகை அடையாளங்களை வழங்க வந்தபோது, குடிவரவு அலுவலக அதிகாரிகள் கடவுச்சீட்டை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.அதேவேளை திட்டமிட்டபடி திருமணத்திற்கு வராவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள மணமகன் தெரிவித்ததையடுத்து குறித்த யுவதி அழுது புலம்பியவாறு அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளார்.
எனினும் தற்போதுள்ள நடைமுறைகளுக்கமைய யுவதிக்கு கடவுச்சீட்டை வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதன்போது பிரச்சினைகளை தீர்க்க நியமிக்கப்பட்ட அதிகாரி நேரம் ஒதுக்கியவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டை வழங்கியுள்ளது.
கடவுச்சீட்டு கிடைக்காத காரணத்தால் யுவதி திட்டமிட்ட வகையில் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது
Discussion about this post