ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகின்றது.
தெற்குப் பகுதியில் உள்ள கிராஸ்டோனர் என்ற இடத்தில் Su-25 என்ற தரைவழி தாக்குல் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் நிலைதடுமாறியது.
இதனையடுத்து விமானி ஜெட்பேக் மூலம் அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேறினார். அடுத்த சில நொடிகளில் அந்த போர் விமானம் அசோவ் கடலில் விழுந்து நொறுங்கியது.
விபத்துக்குள்ளான விமானம் 1980 களில் இருந்து ரஷ்யா பயன்படுத்தி வருவதாக கூறப்படும் அதேவேளை, உக்ரைன் போரில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Discussion about this post