மத்திய அமெரிக்காவில் சுறா மீன் தாக்கியதில் சிறுமியின் கால் துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மத்திய அமெரிக்காவில் உள்ள ஹாண்டுராஸ் நாட்டில் உள்ள கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி அன்னாபென் கார்ல்சன் என்ற சிறுமி தனது பெற்றோருடன் ஹாண்டுராசில் உள்ள பெலிஸ் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு நடைபெற்ற நீச்சல் விளையாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.
அப்போது திடீரென அன்னாபென் கார்ல்சனை சுறா மீன் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அச்சிறுமி, கடினமாக போராடி சுறாவின் பிடியில் இருந்து மீண்டார். அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
எனினும், இந்த சம்பவத்தில் சிறுமியின் வலது கால் துண்டானது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி அன்னாபென் கார்ல்சனுக்கு தீவிர சிகிச்சை வருகிறது.
Discussion about this post