வெளிநாட்டுக் கடன்களை செலுத்தாதிருப்பது என்ற முடிவு மற்றும் நாணயப் பெறுமதி இறக்கம் என்பவை தொடர்பாக உரிய விளக்கம் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது, நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் நிதி சார்ந்த அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உண்டு என்று சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கு முன்பாக அரசாங்கம் இந்த இரு விடயங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்றில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Discussion about this post