தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்
அரசியல் போராட்ட அறிவிப்பு ஒருநாள் போராட்டமாக இல்லாமல், தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் எனவும்
வலியுறுத்துகின்றேன்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
“நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்மாத கடைசியில் அரசியல்
போராட்டத்தை கூறியுள்ளார். உண்மையில் அவரது கட்சி நிலைப்பாட்டின்படி
இது மிக சரியான முடிவாகும்.
’13 மற்றும் மாகாண சபைகள் வேண்டாம்’ என்றால் மாற்றுப் பயணம் இருக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் 13ஐ மறுத்துள்ளார்கள். இருப்பினும் , நிராகரித்து விட்டு,
“எல்லாம் தானாக மாறும்” என அவர்கள் இருக்கவில்லை. புலிகளது
வழிமுறையை ஏற்காதவர்கள்கூட, மாற்றுப் பயணத் திட்டத்தை முன்னெடுத்த
அவர்களது அரசியல் நேர்மையை மதித்தார்கள்
இது இங்கே சிங்கத்தின் குகையில் இருந்தபடி நான் நடத்திய என் நேர்மையான
அறப் போராட்ட வரலாறு.
ஆகவே, ’13 என்பது முதல்படி கூட இல்லை. அதை தீண்டவும் மாட்டோம். அதற்கு
அப்பால் போயே தீருவோம்’ என்பவர்கள் மாற்று போராட்ட பயணத்தை மேற்கொள்ள
வேண்டும். 13 இற்கு அப்பால் செல்லும் அந்த மாற்றுப் பயணம் ஊடக
சந்திப்புகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்
Discussion about this post