வடக்குக்கு எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருள்களை இலகுவாகப் பெறுவதற்கு கச்சதீவு புனிதப் பிரதேசத்தை பொருளாதார மீட்பு வலயமாகச் செயற்படுத்துவது சிறந்த பலனைத் தரும் என்று மருத்துவர் சி.யமுனாநந்தா ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
இலங்கையின் பொருளாதாரப் பேரிடர் ஒரு போரில்லாத போராகும். கடந்த 2 மாதங்களுக்கு மேல் இந்த நெருக்கடி தொடர்கின்றது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சகல சேவைகளும் முடங்கும் நிலைக்கு வந்து விட்டன.
கொரோனாத் தொற்றின் போது முழுமையாக இயங்கிய மருத்துவ சேவைகள் கூடத் தற்போது ஸ்தம்பிதம் அடையும் நிலையில் உள்ளன.
இலங்கையின் வடபகுதிக்கு எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருள்களை இலகுவாகப் பெற இலங்கை அரசாங்கத்தின் சட்டத்தின் கீழும் இந்திய அரசாங்கத்தின் சட்டத்தின் கீழும் கச்சதீவு புனிதப் பிரதேசத்தை பொருளாதார மீட்பு வலயமாக செயற்படுத்துவதன் ஊடாக எமக்கு ஏற்படுகின்ற பொருளாதார அழிவில் இருந்து மீளலாம். இது தொடர்பாக மதத் தலைவர்களும் அரச அதிகாரிகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்தல் அவசியம் ஆகும்.- என்றுள்ளது.
Discussion about this post