Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஓரினச் சேர்க்கையாளர்களை குறிவைக்கும் அனுர!

August 27, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஓரினச் சேர்க்கையாளர்களை குறிவைக்கும் அனுர!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விசேட சுகாதார சேவை வழங்கப்படுமெனதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி  தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் ஜே.வி. பி இன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்

பால்நிலை சமத்துவ அடையாளங்கள் மற்றும் பாலியல் நோக்குநிலைகள் என்பது பல்வேறு உயிரியல் மற்றும் சமூகவியல் காரணங்களால் ஏற்படும் வேறுபாடுகள் ஆகும். எனினும் இலங்கையில்அக்குழுக்கள்சமூகத்தின் பல இடங்களில் வன்முறை, பாகுபாடு மற்றும் ஓரங்கட்டலுக்கு உள்ளாகின்றன.

அத்துடன் சில காலனித்துவ சட்டங்கள், சில நிறுவன கட்டமைப்புகள், சில சமூக நிறுவனங்களின் பிற்போக்குவாத சிந்தனைகள் மற்றும் பிற்போக்கு கலாச்சார கருத்துக்கள் காரணமாக, ஓரின பால் ஈர்ப்பு மற்றும் பால்நிலை மாற்றம் கொண்ட சமூகக்குழுக்களின் நீதிக்கான அணுகல் மறுக்கப்பட்டுள்ளது.

அனைவரும் ஒரே சமமாக நடாத்தப்படும் ஒரு நீதியான சமூகத்தில், எந்த ஒரு குழுவும் அவர்களின் அடையாளம் அல்லது பாலியல் நோக்குநிலை காரணமாக ஓரங்கட்டப்படலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதோடு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26ம் திகதி) வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் விஞ்ஞாபன கோட்பாடுகளில் ‘பால்நிலை சமத்துவத்திற்கான பொருளாதார நீதி’ என்ற ஒ று கோட்பாடும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கோட்பாட்டின் செய்றபாடாக பால்நிலை சமத்துவத்தில் இவை உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன்படி ,

பால்நிலை சமத்துவ தேவைப்பாடுகளில் கவனம் செலுத்தி கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதனூடாக பெண்கள் முகம் கொடுக்கும் கஷ்டங்களை குறைத்தல்.

அரசியலமைப்பில் சமத்துவம் தொடர்பிலான உரிமைகளை விரிவாக்கஞ் செய்து பால்நிலை மற்றும் பாலியல் நோக்கு நிலையின் அடிப்படையில் ஓரங்கட்டப்படாதிருப்பதனை உறுதி செய்தல்.

ஓரின பால் ஈர்ப்பு மற்றும் பால்நிலை மாற்றம்கொண்ட சமூகக் குழுக்களுக்கான விசேடமான சுகாதார சேவைகள், சட்டச் சேவைகள், சமூக பாதுகாப்பு போன்ற அரச சேவைகளையும் நீதிக்கான அணுகலையும் அதிகரித்தல்.

Previous Post

வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலய சூர்யோற்சவ உற்சவம்!

Next Post

யாழில் கடமையின் போது ஆடையின்றி உறங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

Next Post
யாழ் இளைஞனிடம் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

யாழில் கடமையின் போது ஆடையின்றி உறங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.