இலங்கையிலுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய கொடுப்பனவு இன்று (09) வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பதிவு செய்யப்பட்ட 708,231 ஓய்வூதியர்களுக்கு ஜூலை 10ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜகத் டி. டயஸ், “அரச ஊழியர்களுள் சிலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், பதிவு செய்யப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு வங்கிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத் தொகை
24 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும் தபால் திணைக்களத்திற்கும் 28.5 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 99.5% பேருக்கு ஜூலை 10 ஆம் திகதி தாமதமின்றி ஓய்வூதியம் கிடைக்கும்.
ஜுலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் பிரதேச செயலகங்கள் தமது கடமைகளை மேற்கொள்ளாத காரணத்தினால், 13,000 பேரில் வெகு சிலர் ஜுலை 11 ஆம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவைப் பெறுவார்கள் ” என்றார்.
Discussion about this post