அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசு அவ்வப்போது எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளால், ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன்படி 01-01-2016 முதல் 01-01-2020 வரை ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு சில அநீதி இழைக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது
அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்
அத்துடன், சம்பள முரண்பாடுகளை நீக்கி சுமார் 83,000 ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஓய்வு பெற்ற அதிகாரிகளின் ஓய்வூதியத்தை திருத்தியமைத்து அதிகபட்சமாக 2500 ரூபாயாக உயர்த்தும் இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post