பாரிஸில் ஆரம்பமான கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தைக் கொண்டாடும் நோக்கில் Google நிறுவனமானது புதிய Doodle யை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை பாரிஸ் நடத்துகின்ற நிலையில் விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நிகழ்விற்கான எதிர்பார்ப்பைப் பகிர்ந்துகொள்வதால், பல்வேறு தளங்களில் உற்சாகமான பதிவுகள் குவிந்துள்ளன.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், தேடுதல் நிறுவனமானது அதன் முகப்புப் பக்கத்தில் “கூகுள்” லோகோவிற்குப் பதிலாக புதிய Doodle யை அறிமுகப்படுத்தி விளையாட்டுகளை விளையாடுவதைக் காட்டுகிறது.இந்த கலைப்படைப்பு வெள்ளிக்கிழமை முழுவதும் தோன்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் Google Doodle வடிவமைப்பாளரின் பெயரை வெளியிடவில்லை, அதைக் கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் பாரீஸ் ஒலிம்பிக் 2024 இல் சமீபத்திய புதுப்பிப்பு தொடர்பான தேடல் முடிவுகளைப் பெறுவார்கள்.
ஒலிம்பிக் போட்டிகள் இன்று பாரீஸ் நகரில் அதிகாரப்பூர்வமாக துவங்குகிற நிலையில் ஜூலை 26 திறப்பு விழா பாரிஸ் வழியாக பாயும் செயின் நதியில் நடைபெறும்.கொடிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு உள்ளிட்ட நிறைவு விழா ஆகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெறுகின்றமை குறிப்பிடப்பிட்டுள்ளது.
Discussion about this post