தமிழ் சினிமாவில் நடன கலைஞர்கள் என்றால் சில முக்கிய பிரபலங்கள் முதலில் நினைவுக்கு வந்துவிடுவார்கள்.
அதிலும் பெண் நடன கலைஞர்கள் என்றால் முதலில் நியாபகம் வருவது கலா மாஸ்டர் மற்றும் ப்ருந்தா தான். இவர்கள் இந்திய சினிமாவில் பல கலைஞர்களுடன் பணிபுரிந்து சாதனை படைத்துள்ளனர்.
கலா மாஸ்டர் ஒரு கட்டத்தில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கி கலக்கி வந்தார்.
முதல் முயற்சியாக 1 மாதம் அரிசி உணவே எடுத்து கொள்ளாமல் லிக்விட் உணவுகளை மட்டும் தான் குடித்தாராம்.
ஃபிரஷ் ஜுஸ், புரோட்டீன் பவுடர் இதை மட்டும் தான் சாப்பிட்டாராம். முட்டை, சிக்கன் போன்றவற்றை சேர்த்து கொண்டாராம். மேலும் நட்ஸ், ஸ்மூத்தி போன்றவற்றை எடுத்து கொண்டாராம்.
தினமும் சுமார் 1 வருடத்திற்கு ஒரு நாள் கூட மிஸ் செய்யாமல் யோகா செய்தாராம். அதிலும் குறிப்பாக மூச்சு பயிற்சி தொப்பை குறைய பெரிதும் உதவியதாம்.
Discussion about this post