கொரோனாத் தொற்றுக் காரணமாக நாட்டில் ஒரு வாரத்தில் 42 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரம் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரொனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி மட்டும் 129 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். அண்மைய நாள்களில் ஒரு நாளில் இனங்காணப்பட்ட அதிகூடிய கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை இதுவாகும்.
இதுவரையில் நாட்டில் மொத்தமாக 6 லட்சத்து 68 ஆயிரத்து 12 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
20 வயதுக்கும் மேற்பட்ட சனத்தொகையில் கொரோனா முதல் தடுப்பூசியை இதுவரையில் 8 மில்லியன் பேர் பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post