ஒரு வருடத்திற்கும் மேலாக உக்ரைன் ரஷ்யப்போர் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 6,700 ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் திகதியில் தொடங்கி இடைவிடாமல் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இதில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் ஆயுதப் படையின் ஜெனரல் வெளியிட்ட தகவலில், ரஷ்யா கடந்த 7 நாட்களில் மட்டும் 6,700 ராணுவ வீரர்களை இழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் மட்டும் 930 ராணுவ வீரர்களை இழந்து இருப்பதாகவும், இந்த வாரத்தில் உள்ள 3 நாட்களில் ரஷ்யா 1000க்கும் அதிகமான வீரர்களை இழந்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனுடன் ரஷ்யா 88 டாங்கிகளையும் இழந்து இருப்பதாகவும், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 5,720 டாங்கிகளை ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
Discussion about this post