ஒரு லீட்டர் எரிபொருளை 250 ரூபாவுக்கு விநியோகிக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கோப் குழுவின் பரிந்துரைக்கமைய இந்த விசாரணை நடத்தப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கோப் குழுவிற்கு அழைத்த போது, அனைத்து வரிகளுடன் ஒரு லீட்டர் எரிபொருளை 250 ரூபாவுக்கு விநியோகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.
Discussion about this post