இப்போது ஆரம்பித்துள்ளது ஒரு ஒருமித்த பயணத்துக்கான ஆரம்பமாகும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும, மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுக்காக வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளார் என்று தெரிவித்த டலஸ் அழகப்பெரும, புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க உறுதியுடன் உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதே எமது நோக்கம் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முன்னோக்கிக் கொண்டு செல்லவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post