உற்பத்தியின் அளவு பற்றிய முரண்பாடு காரணமாக எண்ணெய் உற்பத்தி அமைப்பான ஒபெக்கில் இருந்து அங்கோலா விலகியுள்ளது.
துணை சஹாரா ஆபிரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளாக அங்கோலா மற்றும் நைஜீரியா உள்ளன.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை அதிகரிப்பதற்கு 2024 இல் எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைக்க ஒபெக்கின் 13 அங்கத்துவ நாடுகள் மற்றும் அதன் 10 கூட்டணி நாடுகள் கடந்த மாதம் தீர்மானித்தன.
அங்கோலா தற்போது நாளொன்றுக்கு சுமார் 1.1 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்வதோடு ஒட்டுமொத்த ஒபெக் நாடுகளும் 30 மில்லியன் பீப்பாய்களை உற்பத்தி செய்கின்றன.
அங்கோலாவின் இந்த அறிவிப்பை அடுத்து மசகு எண்ணெய் விலை 1.5 வீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே அங்கோலா ஒபெக்கில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து,அங்கோலா கனிம வளங்கள் மற்றும் பெற்றோலிய அமைச்சர் டயமன்டீனோ அசவேடோ தெரிவிக்கையில்,
“இந்த அமைப்பில் தொடர்ந்து இருப்பதால் எந்த லாபமும் இல்லை என்று நாம் கருதுகிறோம். எமது நலனை கருதி நாம் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளோம்” என்றார்.
Discussion about this post