Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை

July 28, 2024
in இலங்கை, உலகம்
ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ணத்தை கைப்பற்றியது  இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

புதிய இணைப்புஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ண தொடரில் இலங்கை அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இந்திய அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றியிலக்கை கடந்த இலங்கை அணி ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது.இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.20 ஓவர்கள்

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Smriti Mandhana அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Kavisha Dilhari 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Harshitha Samarawickrama ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Chamari Athapaththu 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இரண்டாம் இணைப்பு9வது மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.போட்டித் தொடரை நடத்தும் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே இந்த போட்டி இடம்பெறுகிறது.ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

முதலாம் இணைப்புமகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (28) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் குறித்த போட்டி நடைபெறவுள்ளது.குறித்த போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை எதிர்த்தாடவுள்ளது.

இறுதிப் போட்டிஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது இது 9ஆவது முறையாகும்,மேலும் இந்திய வீராங்கனைகள் 7 முறை ஆசிய செம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

இலங்கை மகளிர் அணி 6 தடவைகள் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.இந்திய அணி சார்பில், ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் , உமா செத்ரி, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா , ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.இலங்கை அணி சார்பில், சாமரி அதபத்து , அனுஷ்கா சஞ்சீவனி, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, அமா காஞ்சனா, உதேஷிகா பிரபோதனி, விஷ்மி குணரத்னே, காவ்யா கவிந்தி, இனோஷி பிரியதர்ஷனி, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரியா, கவீஷானி குலசூரியா, நிஷானி குலசூரியா, நிஷானி குலசூரிய கிம்ஹானி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

Previous Post

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க தி்ட்டம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Next Post

போயஸ் கார்டன் தனுஷ் வீட்டின் முன் கூடிய கூட்டம்.. வெளியில் வந்து தனுஷ்

Next Post
போயஸ் கார்டன் தனுஷ் வீட்டின் முன் கூடிய கூட்டம்.. வெளியில் வந்து தனுஷ்

போயஸ் கார்டன் தனுஷ் வீட்டின் முன் கூடிய கூட்டம்.. வெளியில் வந்து தனுஷ்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.