ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லான்-கார் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் நடந்துள்ளது.
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்களின் செயற்பாடுகளுக்கு வழிகாட்டும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி கூட்டுறவுச் சட்டகத்தை 2023-2027 அறிமுகப்படுத்துவது தொடர்பில் இந்தச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இலங்கை எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களைப் பாதுகாக்க ஐ.நா தலையீடு தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையுடன் முறையான மற்றும் நேர்மறையான ஈடுபாட்டின் முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் திருமதி ஹனா சிங்கரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
Discussion about this post