ஐஸ்லாந்து தலைநகர் ரையாக்விக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக எரிமலையில் குமுறல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெருப்பு குழம்பு வெளியேறியது.
இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நெருப்பினால் புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமான காட்சியளிக்கிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் ஹே ஜப்ஜல்லாஜோகுல் எரிமலை குமுறல் காரணமாக 100,000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
இதனால் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு எரிமலை குமுறல் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.
Discussion about this post