ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தென்பட்ட பனிக்கரடியை பொலிஸார் சுட்டு கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.குறித்த பனிக்கரடியால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் கொன்றுள்ளதாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
பனிக்கரடிகள் ஐஸ்லாந்தை பூர்வீகமாக கொண்டவை அல்ல. ஆர்டிக் பனிப் பிரதேசத்தில் தான் அதிகளாவிலான பனிக்கரடிகள் வாழ்கின்றன.கிரீன்லாந்திலிருந்து உருகும் பனிக்கட்டிகள் வழியே பனிக்கரடிகள் ஐஸ்லாந்திற்கு வருகின்றன.கடையாக 2016 ஆம் ஆண்டு தான் ஐஸ்லாந்து நாட்டில் பனிக்கரடி காணப்பட்டது. 9 ஆம் நூற்றாண்டில் இருந்து இப்போது வரை ஐஸ்லாந்தில் 600 பனிக்கரடிகள் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
Discussion about this post