பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ள குற்ற கும்பல்களில் அங்கம் வகிக்கும் கஞ்சிபானி இம்ரான், லொக்கு பெட்டி மற்றும் ரொடும்ப அமில ஆகியோரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அந்நாட்டின் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளது. சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெலாரஸின் இலங்கை துணைத் தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பெலாரஸிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் குற்றக் கும்பல் உறுப்பினர்களான கஞ்சிபானி இம்ரான், லோகு பெட்டி மற்றும் ரொடும்ப அமில ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் சமர்ப்பித்த கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் போலியானவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரான், லொகு பெட்டி மற்றும் ரொடும்ப அமில ஆகியோர் தற்போது பெலாரஸ் நாட்டில்உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Discussion about this post