ஐந்து அமைச்சர்கள் தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
ஹரின் பெர்னாண்டோ , மனுஷ நாணயக்கார, பந்துல குணவர்தன, தம்மிக்க பெரேரா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரே தமது அமைச்சுப் பதவிகளை இவ்வாறு இராஜினாமா செய்துள்ளனர்.
சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்கும் நோக்கிலேயே அவர்கள் பதவி துறந்துள்ளனர்.
ஹரின், மனுச ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி, அமைச்சு பதவிகளை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post