2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் (Imthiaz Bakeer) நியமிக்கப்பட்டுள்ளார்.குறித்த நியமனத்தை அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (27) வழங்கி வைத்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
புதிய நியமனங்கள் மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) நியமிக்கப்பட்டுள்ளார்
அத்துடன் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும் (Kabir Hashim) நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post