ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று
நாட்களாக சபை அமர்வுகளை நிராகரித்து பாராளுமன்றத்திற்கு முன்பாக
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்தினுள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின்
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை அமர்வுகளில்
கலந்துகொள்ளாதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
அண்மையில் தீர்மானித்தனர்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மற்றும் ஆளும் கட்சி
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திரிவடைந்து,
மனுஷ நாணயக்காரவிற்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை
விடுத்ததாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சியினர் இந்த தீர்மானத்தை
எடுத்தனர்.
Discussion about this post