தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் இப்போது படங்களில் இசையமைப்பதை தாண்டி இசைக் கச்சேரிகள் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக நிறைய இசையமைப்பாளர்களின் கச்சேரிகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.
வெளிநாட்டில் இதுவரை அதிக நிகழ்ச்சிகள் நடக்க இப்போது தமிழகத்திலும் நடக்கிறது.
அண்மையில் சென்னையில் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசைக் கச்சேரி நடந்தது, இந்த நிகழ்ச்சியில் நிறைய பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் டிக்கெட் இருந்தும் அனுமதிக்கப்படாமல் கூட்ட நெரிசலில் அவதிப்பட்டுள்ளனர.
அந்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியாக இப்போது போலீசார் உள்ளே நுழைந்து பிரச்சனை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட அறிக்கையில், பெரிய நிகழ்வை நடத்துவது சிக்கலான பணி, இதுபோன்ற நிகழ்வில் கூட்ட நெரிசல் போன்ற அசவுகரியங்கள் ஏற்படுவது துரதிஷ்டவசமானது.
எங்கள் இசையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ரசிகர்கள் அவதியடைவது வருத்தத்திற்குறியது தான். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இடையூறுக்கான காரணங்களை ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும்.
ஒரு சக இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமானுக்கு துணை நிற்கிறேன். வருங்காலத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
Discussion about this post