இலங்கையின் ஏற்றுமதி வருமானம் மற்றும் இறக்குமதி வருமானம் குறித்து மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தகவல் வெளியிட்டுள்ளது.அதன்படி இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 5.6 சதவீதமும், இறக்குமதி செலவு 9.1 சதவீதமும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த காலப்பகுதியில் எரிபொருளுக்காக அதிகளவில் இறக்குமதி செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
டொலர்கள் செலவு
இந்த நிலையில் குறித்த 7 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 2 ஆயிரத்து 548 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் 2025 ஏப்ரல் மாதம் முதல் திருத்தங்களைச் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post