எஸ்.வி.சேகர் சினிமாவில் காமெடியான நடிப்புக்கு புகழ் பெற்றவர். அவர் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மயிலாப்பூர் தொகுதியில் எம்எல்ஏ-வாக அவர் இருந்திருக்கிறார்.
அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அது விலக்கிகொள்ளபட்டது.
இந்நிலையில் கடந்த மே 22ம் தேதி எஸ்.வி.சேகருக்கு செல்போனில் கொலை மிரட்டல் வந்திருக்கிறது என போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
‘தொடர்ந்து பல அழைப்புகளில் கொலை மிரட்டல் வருகிறது. எனது வீட்டில் பெட்ரோல் குண்டு இதற்குமுன் வீசப்பட்டு இருக்கிறது. எனக்கு எதாவது ஆனால் போலீசார் தான் பொறுப்பு’ என எஸ்வி சேகர் புகாரில் கூறி இருக்கிறார்.
Discussion about this post