எவ்வாறான சவால்கள்ளாயினும் பசுமை விவசாயக் கொள்கையை மாற்றமின்றி
மேற்கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே
கூறியுள்ளார்.
விவசாய அமைச்சிற்கு புதிதாக பதவியேற்றுள்ள செயலாளர் மற்றும்
அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே
அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அவர் தனது அரசியல் பிம்பத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டின்
நலனையும் மக்களையும் கருத்திற்கொண்டு குறித்த கொள்கைகளை
செயற்படுத்துவதில் உறுதியாகவுள்ள ஜனாதிபதிக்கு தான் உறுதுணையாக நிற்பதாக
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் பல அமைச்சுகளில் அமைச்சுப் பதவிகளை வகித்த போதிலும், அந்த
அமைச்சுகளை விட விவசாய அமைச்சில் உரம், நெல் விடயத்தில் அதிக
மோசடி கும்பல்கள் செயற்படுவதாக இவர் சுட்டிக்காட்டியுள்ளதாக
விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post