மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கவில்லை என அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாலும் அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கேட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ள கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக தான் தொடர்ந்து பதவிவகிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post