நாளை மறுதினம் புதன்கிழமை முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் ஆறு நாள்களுக்கு மட்டுமே வழங்க முடியும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
3 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிவாயு இன்று நாட்டுக்கு கொண்டு வரப்படும். எனினும் விநியோகம் இரண்டு நாள்களுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை எரிவாயு நாட்டுக்கு வரும். ஆனால் இறக்கும் பணி மற்றும் சிலிண்டர்களை நிரப்ப ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் ஆகும். எனவே நாங்கள் அதை ஏப்ரல் 27 அன்றுதான் சந்தைக்கு விநியோகிக்க முடியும்’ என்று அவர் கூறினார்.
3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு மூன்று நாள்களுக்கு மட்டுமே விநியோகிக்க முடியும். நாளைமறுதினம் மற்றொரு 3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post