சமையல் எரிவாயுவை பெறுவதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று கொழும்பு, தெஹிவளையில் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் அந்த முதியவரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதேவேளை, இன்று காலை முதல் தெஹிவளை காலி வீதி, வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி வழங்கப்படுகின்றது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளபோதும், நாட்டின் பலபாகங்களிலும் எரிவாயு சிலிண்டருக்குத் தற்போதும் தட்டுப்படு நிலவுகின்றது.
Discussion about this post