எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் 31 ஆம் திகதி எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த திருத்தங்களின் கீழ், மூன்று வகையான எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டதுடன், இரண்டின் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.
கணிசமான அளவு குறையும் விலை
இந்நிலையில், இந்த மாதாந்த விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையில் கணிசமான அளவு குறையும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு பொருளாதார ரீதியில் குறிப்பிட்ட மட்டத்தை எட்டியுள்ள நிலையில் எரிபொருள் விலைக்கு சில விசேட நிவாரணங்களை மக்களுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வழக்கமான பெட்ரோல் விலை லிட்டருக்கு 20-30 ரூபாயும், வழக்கமான ஒயிட் டீசல் விலை லிட்டருக்கு 15-20 ரூபாயும் குறைக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post