எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தானம் இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று இரண்டாவது தடவையாக எரிபொருள் விலைகளை அதிகரித்தது. டீசல் வகைகளின் விலைகள் லீற்றருக்கு 15 ரூபாவாலும், பெற்றோலின் விலை லீற்றருக்கு 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரிக்குமா என்று கேட்கப்பட்டபோது, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தில் எரிபொருள்களை விநியோகித்து வருவதால், எரிபொருள்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என்று சிலவாரங்களுக்கு முன்னர் நிதிய அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
Discussion about this post