இலங்கையில் தற்போதுள்ள நிலைமை காரணமாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஏற்கனவே எரிபொருளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைகள் நடைபெற்று வரும் நிலையில், எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தங்கள் விநியோக நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்தச் சங்கம் தெரிவித்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றன என்ற பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவித்தல் வெளியாகியுள்ளது.
Discussion about this post