எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அத்தோடு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறைந்தபட்சம் 50% இருப்பு வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்காத எரிபொருள் நிலையங்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து இடைநிறுத்துமாறும் CPCயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post