எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று நிரப்பு நிலையங்கள் பல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்ப வரும் மக்கள் கடும் போக்குடன் நடந்து கொள்வதால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தேவையான எரிபொருள் விநியோகம் கிடைக்கும் வரை எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post