இலங்கை போக்குவரத்துச் சபை வாழைச்சேனை கிளை ஊழியர்கள் நேற்று (16) போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வாழைச்சேனை இ.போ.சபைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியின் குறுக்கே பஸ் வண்டிகளை நிறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடமையை மேற்கொள்ள தூர இடங்களிலிருந்து டிப்போவுக்கு வரும் ஊழியர்கள் பெற்றோல் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டத்தை மேற்கொண்டனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸாரும், இராணுவத்தினரும்
போராட்டம் நடத்திய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.

அந்தவகையில் இன்று பெற்றோல் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Discussion about this post