எரிபொருள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காரைநகர் – வலந்தலைச் சந்தியில் போக்குவரத்தை முடக்கி நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிபொருள் பெறுவதற்காக கடந்த 5 நாள்களாகக் காத்திருக்கின்றோம் என்று தெரிவித்த மக்கள் தங்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
எரிபொருள் நிரப்பு நிலையப் பம்பி பழுதடைந்து விட்டது என்று தெரிவித்து எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், பம்பியைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
எரிபொருள் பம்பியைத் திருத்துபவர் புத்தளத்தில் இருந்து வருவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.
பம்பி திருத்தப்பட்டு நாளை எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று மக்களிடம் தெரிவித்ததை அடுத்து, மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
Discussion about this post