சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 67 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. பொலிஸார், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்புக்களில் 5 ஆயிரத்து 690 லீற்றர் பெற்றோலும், 10 ஆயிரத்து115 லீற்றர் டீசலும், 5 ஆயிரத்து 620 லீற்றர் மண்ணெண்ணெயும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 20 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக எரிபொருளை சேகரித்தமை, விற்பனை செய்தமை மற்றும் பதுக்கி வைத்தமை தொடர்பில் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
Discussion about this post