எரிபொருள் நெருக்கடி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன என்று ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் எஸ். பி. விதானகே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக சில ரயில் சேவைகளை மட்டுப்படுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்த அவர், அதனால் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பிரச்சினை காரணமாக ரயில்களை இயக்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், தினமும் 50 முதல் 60 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
Discussion about this post