பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும், லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இன்று மூடுவதற்கு வாய்ப்புள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு தமது முனைய எரிபொருள் நிலையங்களை மூடுவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் காலியில் எரிபொருள் வரிசையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவத்தையடுத்து எரிபொருள் நிலையங்களின் பாதுகாப்புத் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்கும் அதே வேளையில் ஐ.ஓ.சி. நிறுவனம் மட்டுமே தற்போது தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குகின்றது.
Discussion about this post