எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போனதால், உரிமையாளரின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் ஒன்று கெக்கிராவ, ரணஜயபுர பகுதியில் பதிவாகியுள்ளது.
நேற்றிரவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தநிலையில், ஒரு கட்டத்தில் எரிபொருள் தீர்ந்து போயுள்ளது. அதனால் அங்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வீட்டில் திடீரெனத் தீ பரவியுள்ளது. எரிபொருள் இல்லாததால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்றே வீட்டுக்குத் தீ வைத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டில் இருந்தவர்கள் அயலவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், கெக்கிராவ பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post